மறைபரப்பு ஞாயிறு தினத்தை முன்னிட்டு குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட பாப்பிறை மறைபரப்பு சபைகளின் இயக்குனர் அருட்தந்தை எயின்சிலி றொசான் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து பக்தி சபையினரின் சந்தை நிகழ்வும், இளையோரின் பேய்வீடு, மகளிர் மன்றத்தின் சீட்டிழுப்பு என்பனவும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin