குருநகர் புனித யாகப்பர் ஆலய மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம் ஐப்பசி மாதம் 18,19,20ஆம் திகதிகளில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை றொகான் அவர்களின் உதவியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறையாசிரியர்கள் திருகோணமலை, மட்டக்களப்பு மறைமாவட்டங்களை தரிசித்து அங்குள்ள பிரசித்திபெற்ற ஆலயங்களையும் இடங்களையும் பார்வையிட்டதுடன் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தில் நடைபெற்ற மறையாசிரியர்களுடனான ஒன்றுகூடலிலும் பங்குபற்றினர்.
உவர்மலை குழந்தை இயேசு ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை சேவியர் ரஜீவா அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் அனுபவ பகிர்வு, மகிழ்வூட்டல் செயற்பாடுகள், மகிழ்வு விருந்து என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் 21 மறையாசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர்.

