குருநகர் புனித யாகப்பர் ஆலய முதியோர் சங்க சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 13ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முதியோர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்கு முதியோர் கொழும்புத்துறை புனித வளனார் முதியோர் இல்லத்தை தரிசித்து அங்கு இடம்பெற்ற கலைநிகழ்வுகள், மகிழ்வூட்டல் செயற்பாடுகள் என்வற்றில் கலந்துகொண்டதுடன் அங்குள்ள முதியோருக்கான உணவுப்பொதிகளையும் வழங்கிவைத்தனர்.
இந்நிகழ்வில் 25ற்கும் அதிகமான முதியோர் பங்குபற்றியிருந்தனர்.