குருநகர் பங்கு முதியோர்களுக்கான மாதாந்த ஒன்றுகூடல் யூலை மாதம் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் செயலாளர் திரு. நெல்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்திய காலாநிதி திரு. திருமாறன் அவர்கள் கலந்து கருத்துரை வழங்கியதுடன் தொடர்ந்து முதியோர்களுக்கான மகிழ்வூட்டல் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இம்மகிழ்வூட்டல் நிகழ்வில் திரு. ஜெகன் கரன்சன் அவர்கள் வளவாளராக கலந்து விளையாட்டுக்கள், மகிழ்வூட்டல் செயற்பாடுகள் ஊடாக முதியோரை நெறிப்படுத்தினார்.

By admin