திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய குருவுக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலி 03ஆம் திகதி கடந்த சனிக்கிழமை திருகோணமலை புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கில் அமலமரித்தியாகிகள் சபை திருத்தொண்டரான சகாயநாதன் விமல்ராஜ் அவர்கள் புதிய குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
புதிய குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் அர்ப்பணிப்புடன் பணிவாழ்வில் நிலைத்திருந்து இறைபணியாற்ற நல்வாழ்த்துக்களை தெரிவித்து நிற்கின்றோம்.