யாழ். மறைமாவட்டத்தில் புதிய குருக்களுக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு 03ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.

மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலி யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த திருத்தொண்டர்களான பொன்ராசா டினுஸன், அலெக்சாண்டர் றொகான் டியோனி, கிறிஸ்ரி ஞானராஜா றொகான், லூயிஸ் அன்ரனி பஸ்ரியன் மற்றும் திருவுள பணியாளர் சபையை சேர்ந்த திருத்தொண்டர் சஞ்சுதன் ஆகியோரே புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர்கள் அர்ப்பணிப்புடன் பணிவாழ்வில் நிலைத்திருந்து இறைபணியாற்ற இறையாசீர் வேண்டுவோம்.

By admin