வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்த கவனயீர்ப்பு பேரணி மாசி மாதம் 02ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணி பிரதேசத்தில் நடைபெற்றது.
நெடுங்கேணி பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய இப்பேரணி நெடுங்கேணி பிரதேச செயலகத்தை சென்றடைந்து, அங்கு ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட வேண்டிய மகஜர் வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் மதத்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர், அரசியல் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், வவுனியா வடக்கு கிராம மக்கள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

