கிளிநொச்சி மறைக்கோட்ட பங்கு மக்களுக்கான தவக்கால தியானம் மாசி மாதம் 28ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வவுனிக்குளம் கல்வாரிப்பூங்காவில் நடைபெற்றது.

மறைக்கோட்ட பங்குத்தந்தையர்களின் ஒழுங்குபடுத்தலில் பரிபாலகர் அருட்தந்தை நியூமன் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் சிலுவைப்பாதை, திருப்பலி, நற்கருணை வழிபாடு என்பன இடம்பெற்றன.

திருப்பலியை அருட்தந்தை இருதயதாஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் சிலுவைப்பாதை மற்றும் நற்கருணை வழிபாட்டை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ரமேஸ் அவர்கள் வழிநடத்தினார்.

இத்தியானத்தில் 560ற்கும் அதிகமான இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin