கிளிநொச்சி மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான வதிவிட பாசறை மாசி மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை உருத்திரபுரம் ஆரோபணம் இளைஞர் இல்லத்தில் நடைபெற்றது.
அருட்தந்தையர்கள் சதீஸ்குமார் மற்றும் அலின் கருணாகரன் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலி, நற்கருணை வழிபாடு, சிலுவைப்பாதை தியானம், விளையாட்டுக்கள், மகிழ்வூட்டல் நிகழ்வுகள், கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள் என்பன இடம்பெற்ற்ன.
அருட்தந்தை றொகான் டியோனி அவர்கள் பீடப்பணியாளர்களின் பணியின் முக்கியத்துவம் பற்றிய கருத்துரை வழங்கியதுடன், திருமறைக்கலாமன்ற வளவாளர்கள் திரு. சதீஸ்குமார் மற்றும் திரு. ஜெகன் கரன்சன் ஆகியோர் கலந்து தலைமைத்துவ பயிற்சியையும், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர் திரு. நிசாந்தன் அவர்கள் உதவு முறை பயிற்சியையும் பிரதேச செயலக நன்னடத்தை உத்தியோகத்தர் அவர்கள் விழிப்புணர்வு கருத்தமர்வையும் நடாத்தனர்.
சிறப்பு நிகழ்வாக யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மாணவர்களின் “வந்து பாருங்கள்” இறையழைத்தல் நிகழ்வு இடம்பெற்றதுடன் இந்நிகழ்வை அருட்தந்தை எட்வின்நாதன் மற்றும் குருமட மாணவர்கள் இணைந்து குறுநாடகம், குழுச்செயற்பாடுகள், அனுபவ பகிர்வுகள் ஊடாக வழிப்படுத்தினர்.
இறுதிநாள் நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் திருப்பலி இடம்பெற்றதுடன் இந்நிகழ்வுகளில் மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 220 பீடப்பணியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

