தொடர்பாடலாண்டு சிறப்பு நிகழ்வாக கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் தொடர்பான கருத்தமர்வு மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட ஊடக இணைப்பாளர் அருட்தந்தை சதீஸ்குமார் அவர்களின் உதவியுடன் வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வை கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்நதந்தை ஜெயக்குமார் அவர்கள் கலந்து ஆரம்பித்துவைத்தார்.
யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் மற்றும் யாழ். திருமறைக்கலாமன்ற கலைஞர் திரு. ஜெகன் கரன்சன் ஆகியோர் கலந்து கருத்துரைகள், குழு ஆய்வுகள், குழுச்செயற்பாடுகள், விளையாட்டுக்கள், கலந்துரையாடல், விழிப்புணர்வு பட காட்சிப்படுத்தல் என்பவற்றின் ஊடாக இளையோரை வழிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் 50 வரையான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

