பொதுநிலையினர் வலுவூட்டலை நோக்காகக்கொண்டு கிளறேசியன் சபை விவிலிய பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட விவிலிய மாநாடு புரட்டாதி மாதம் 13ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

‘விவிலியப்பார்வையில் ஜூபிலி ஆண்டு’ என்னும் கருப்பொருளில் பணியக இயக்குநர் அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்துரைகளும் குழு ஆய்வுகளும் இடம்பெற்றன.

அச்சுவேலி பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்திராநாயகம் அவர்கள் “பழைய ஏற்பாட்டின் பார்வையில் ஜூபிலி ஆண்டு” எனும் தலைப்பிலும் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி நிதி முகாமையாளர் அருட்தந்தை பிரான்சிஸ் டினேசன் அவர்கள் “புதிய ஏற்பாட்டின் பார்வையில் ஜூபிலி” எனும் தலைப்பிலும் செம்பியன்பற்று – தாளையடி பங்குத்தந்தை அருட்தந்தை யஸ்ரின் ஆதர் அவர்கள் “வரலாற்றில் திருத்தந்தையர்களின் ஜூபிலிக்கான அழைப்பு” எனும் தலைப்பிலும் கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.

தொடர்ந்து பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு பிரதிநிதிகள், பொதுநிலையினரென பலரும் கலந்து பயனடைந்தனர்.

By admin