யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய வளாகத்தில் இயங்கும் பணியகங்களில் கடமையாற்றும் பணியாளர்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் மார்கழி மாதம் 22ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒன்றுகூடலும் கிறிஸ்து பிறப்பு விழா சிந்தனைகளுடன் அன்பளிப்பு பரிமாற்றமும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில், மறைக்கல்வி நிலையம், மறைநதி கத்தோலிக்க ஊடக மையம், பொதுநிலையினர் கழகம் மற்றும் திருவழிபாட்டு நிலையம் ஆகியவற்றின் இயக்குநர்களும், பணியாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.

