புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலய மறைப்பாடசாலையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கா.பொ.த சாதரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கத்தோலிக்க பாட முன்னோடிப் பரீட்சை மாசி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் இடம்பெற்ற இப்பரீட்சைக்கு புதுக்குடியிருப்பு பிரதேசத்தை அண்டிய எட்டு பாடசாலைகளை சேர்ந்த 60ற்கும் அதிகமான மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

By admin