புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலய மறைப்பாடசாலையில் தரம் ஒன்றிற்கு புதிதாக இணையும் மாணவர்களுக்கான கால்கோள் விழா மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து 11 சிறார்களுக்கான வரவேற்பும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், மறையாசிரியர்கள், மறைக்கல்வி மாணவர்கள், பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin