மட்டக்களப்பு மறைமாவட்டம் காரைதீவு குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அம்புறோஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

05ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 07ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை கிளறேசியன் சபை அருட்தந்தை ஆன் றோய் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை குணமளிக்கும் இயேசு சபை அருட்தந்தை அன்பு அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin