யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் காட்சி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை பூநகரி புனித அந்தோனியார் ஆலயத்திலும் 11ஆம் திகதி புதன்கிழமை இரணைமாதாநகர் புனித செபமாலை அன்னை ஆலயத்திலும் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்திலும் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலயத்திலும் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலயத்திலும் நடைபெற்றது.
ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் வழிநடத்தலில் தவைலர் செல்வன் நிராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் செல்வன் கட்சன் பிராங்க் விதுசன் அவர்களின் நெறியாள்கையில் “சிலுவையோடு பயணம்” எனும் மையக்கருத்தில் சிலுவைப்பாதை நிலைகள் இளையோரால் காட்சிப்படுத்தப்பட்டு தியானம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

By admin