கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன செயற்திட்டங்கள் தொடர்பான அனுபவங்களையும் விளக்கங்களையும் பெற்றும்கொள்ளும் நோக்கோடு வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இணைந்து மேற்கொண்ட கள தரிசிப்பு பயணம் மாசி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள வன்னி கியூடெக் நிறுவனத்தை தரிசித்த மாணவர்கள் அங்கு கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நிறுவன வரலாறு, செயற்திட்டங்கள், செயற்திட்ட முகாமைத்துவம், பெண்கள் வலுவூட்டல் அமைப்புக்கள் தொடர்பான விளக்கங்களை பெற்றுக்கெண்டனர்.
தொடர்ந்து மாணவர்கள் களத்தரிசிப்பை மேற்கொண்டு பரந்தன் பிரதேச சமூக மட்ட பயனாளிகளுடனும் கலந்துரையாடி அனுபவங்களை பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் 85 மாணவர்களும் விரிவுரையாளர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.

