சுண்டுக்குளி புனித யுவானியார் மற்றும் திரேசம்மாள் ஆலயங்களின் மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் இளையோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பணயம் ஆவணி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் இளையோரும் இணைந்து கௌதாரிமுனை கடற்கரைப் பிரதேசத்திற்கு சென்று அங்கு நடைபெற்ற மகிழ்வூட்டல் நிகழ்வுகளில் பங்குபற்றினர்.

இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்கள், இளையோர், மறையாசிரியர்களென 70 வரையானவர்கள் கலந்து பயனடைந்தனர்.

By admin