மன்னார் மறைமாவட்டம் உயிலங்குளம் கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்லத்தின் புதிய இயக்குநராக இந்திய நாட்டை சேர்ந்த வின்சென்சியன் சபை அருட்தந்தை அகஸ்ரின் முண்டேகாட் அவர்கள் தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வு ஆவணி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை அங்கு நடைபெற்றது.

இத்தியான இல்லத்தில் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை தவிர்ந்த ஏனைய சனிக்கிழமைகளில்
காலை 9:30 மணி தொடக்கம் மாலை 4:00 மணி வரை நற்கருணை ஆராதனையும் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை காலை 9:30 மணி தொடக்கமும், இரண்டாவது வெள்ளிக்கிழமை இரவுத்திருவிழிப்பு 9:30 மணிதொடக்கம் அதிகாலை 5:00 மணி வரை நடைபெற்றுவருவதுடன் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் காலை தொடக்கம் மாலை வரை அருட்தந்தை அகஸ்ரின் முண்டேகாட் அவர்களை சந்தித்து ஜெபம் வேண்டி ஆசி பெற விரும்புகிறவர்களுக்கான சந்திப்பும் இடம்பெற்றுவருகின்றது.

By admin