வட்டக்கச்சி பங்கு கல்மடுநகர் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றதுடன் அன்றைய தினம் காலை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வும் அங்கு நடைபெற்றது.

செபமாலைதாசர் சபை அருட்தந்தை அன்ரனி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 11 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

திருவிழா திருப்பலியை கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை பரந்தன் பங்குத்தந்தை அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலி நிறைவில் முதன்முறையாக ஆலய வெளிவீதியில் புனிதரின் திருச்சொருப பவனி நடைபெற்றதுடன் பவனி நிறைவில் ஆசீர்வாதமும் இடம்பெற்றது.

அன்று மாலை பங்குமக்களுக்கான “மகிழ்ந்திருப்போம்” விளையாட்டு நிகழ்வுகளும் அங்கு இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin