உலக உணவு தினத்தை முன்னிட்டு கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட சேதன சந்தையும் காட்சிப்படுத்தலும் ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உணவுப்பாதுகாப்பு செயற்திட்ட வீட்டுத்தோட்ட பயனாளிகள் மற்றும் சமூகமட்ட அங்கத்தவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட இராசயனமற்ற காய்கறிகள், உணவுப்பொருட்கள், பன்னை வேலைப்பொருட்கள், ஆடைகள், விதை தானியங்கள், தோல் உற்பத்தி பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு. விஜயகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும் முல்லைத்தீவு உதவி விவசாய பணிப்பாளர் திருமதி லக்சன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் முல்லைத்திவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்களென பலரும் பங்குபற்றியிருந்தனர்.

