யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையமும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் இணைந்து கரவெட்டி பங்கில் முன்னெடுத்த மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறையாசிரியர்களுக்கான பாடத்திட்ட தயாரிப்பு, கற்பித்தல் முறை ஆகியவை தொடர்பான கருத்துரைகளும் மாணவர்களுக்கான குழுச்செயற்பாடுகள், விளையாட்டுக்கள், கருத்துரைகள் என்பனவும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் 120 மாணவர்களும் 32 மறையாசிரியர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin