கரம்பொன் புனித வேளாங்கன்னி அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா 25ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து அழகிய தோற்றத்துடன் அமைக்கப்பட்ட ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப ஆசீர் ஆயர் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை றெக்னோ, குருக்கள், துறவிகள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.
இவ்வாலயத்திற்கான அடிக்கல் 2023ஆம் தற்போதைய பங்குத்தந்தையால் நாட்டி வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.