கரம்பொன் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் இலவச மருத்துவ முகாம் தை மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை மெலிஞ்சிமுனை றோ.க.த.க பாடசாலையில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலையின் 10 பேர் கொண்ட வைத்திய நிபுணர் குழு, மருத்துவ பீட மாணவர்கள், சுகாதார ஊழியர்கள், தாதியர்களென 50 பேர் கலந்து குருதி அமுக்க பரிசோதனை, கண் பரிசோதனை, பற்சிகிச்சை, புற்றுநோய் பரிசோதனை, பெண் உடலியல் தொடர்பான பரிசோதனைகள் மற்றும் பொது உடற்பரிசோதனைகளை மேற்கொண்டு, நோயாளர்களுக்கான இலவச மருந்துகளையும் வழங்கினர்.
இம்முகாமில் மெலிஞ்சிமுனை, கரம்பொன், ஊர்காவற்துறை, பருத்தியடைப்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 300 வரையான நோயாளிகள் கலந்து பயனடைந்தனர்.
மெலிஞ்சிமுனை பங்கில் 2022ஆம் ஆண்டு இலவச மருத்துவ முகாம் நடாத்தப்பட்டு தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் முன்னெடுக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

