புங்குடுதீவு பங்கின் கரந்தடி புனித வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 8ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

04ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை கிளறேசியன் சபை அருட்தந்தை அருள்ராஜ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை கிளறேசியன் சபை அருட்தந்தையும் இப்பங்கை சேர்ந்தவருமான டொனால்ட் கிறிஸ்ரி அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin