கிளிநொச்சி, கரடிப்போக்கு, டொன் பொஸ்கோ பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஆங்கிலதின நிகழ்வு யூலை மாதம் 16ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை இம்மானுவேல் றொஜீசியஸ் அவர்களின் தலைமையில்“Master English Master the world” என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஆங்கில தின போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றதுடன், கிளிநொச்சி டொன் போஸ்கோ InfoTech நிறுவனத்தில் கல்விபயின்று இந்தியாவின் சிறந்த நிறுவனங்களில் AI பொறியியலாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள 9 இளையோருக்கான கௌரவிப்பும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் கிளிநொச்சி தெற்கு கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திரு. கணேஸமணி குமரன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
டொன் பொஸ்கோ பாடசாலை கிளிநொச்சி பிரதேச மாணவர்களின் ஆங்கில அறிவுடனான கல்வியை மேம்படுத்தும் நோக்கில் 2023ஆம் கரடிப்போக்கில் ஆரம்பிக்கப்பட்டதுடன் தற்போது 350ற்கும் அதிகமான மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வி பயின்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.