கனடா திருமறைக்கலாமன்றத்தின் அனுசரணையில் வவுனியா வடக்கு ஒதியமலை பிரதேசத்திலுள்ள பட்டிக்குடியிருப்பு அ.த.க. பாடசாலை மாணவர்களுக்கான ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மாசி மாதம் 12ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

அளம்பில் சுவாமி தோட்டத்திற்கு பொறுப்பான அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருமறைக்கலாமன்ற உதவி நிர்வாக இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் கலந்து மாணவர்களுக்கான ஒருதொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார்.

மேலும் கனடா திருமறைக்கலாமன்றத்தின் அனுசரணையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு திருமறைக்கலாமன்ற மாணவர்களுக்கும் மாங்குளம், உருத்திரபுரம், உரும்பிராய், மட்டக்களப்பு ஆகிய இடங்களிலுள்ள சிறுவர் இல்லங்களிற்கும் கிளிநொச்சியிலுள்ள விசேட தேவையுடைய சிறுவர் இல்லத்திற்கும் ஒருதொகுதி கற்றல் உபகரணங்கள் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

By admin