தேசிய கல்வி அமைச்சின் அனுசரணையில் வட மாகாண பாடசாலைகளில் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு பங்குனி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
வடமாகாண கிறிஸ்தவ பாட உதவி கல்விப்பணிப்பாளர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை லெபோண் சுதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இச்செயலமர்வில் இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஓய்வுநிலை ஆணையாளர் திருமதி ஜீவராணி புனிதா, யாழ். தேசிய கல்வியியல் கல்லூரி ஓய்வுநிலை விரிவுரையாளர் திருமதி பப்சி மரியதாசன் மற்றும் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செபமாலை அன்புராசா ஆகியோருடன் திருமதி விக்டோரியா, திருமதி சுனித்தா வெனான்சியஸ், திருமதி சுயாத்தா ரவிலிங்கன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து ஆசிரியர்களை வழிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் 260 ஆசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin