கண்டி மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட திருவழிபாட்டு மாநாடு ஆவணி மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை புனித அந்தோனியார் பேராலய மண்டபத்தில் நடைபெற்றது.
திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை சுரேந்திர பிரகாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை வியான்னி பெர்னான்டோ, அருட்தந்தை ஐவன் ஜெயசுந்தர, அருட்தந்தை சாள்ஸ் மரியதாஸ் ஆகியோர் கலந்து நற்கருனை ஆன்மீகம் தொடர்பாக சிறப்புரையாற்றினார்கள்.
தொடர்ந்து குழுக்கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அல்வின் பீற்றர் பெர்னான்டோ, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர்.