போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையில் கல்விபணி புரியும் யாழ். மாகாண அருட்சகோதரிகளால் கட்டைக்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட பங்கு தரிசிப்பு நிகழ்வு மாசி மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மாகாண கல்வி ஆலோசக அருட்சகோதரி சகாயநாயாகி பஸ்ரியாம்பிள்ளை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இல்ல தரிசிப்புக்கள், பக்தி சபைகளுடனான சந்திப்பு, மாணவர், இளையோர், பெற்றோருடனான கலந்துரையாடல், அன்பிய திருப்பலி, ஒன்றுகூடல், அன்பிய வழிபாட்டு பயிற்சிகள், தியானம், தவக்கால சிந்தனைகள், கருத்துரைகள் என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வை 16 அருட்சகோதரிகள் இணைந்து நெறிப்படுத்தியதுடன் இறுதிநாளன்று பங்குத்தந்தையுடனான மீளாய்வும் அறிக்கை சமர்ப்பிப்பும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin