கட்டைக்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் இலவச மருத்துவ முகாம் பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக வைத்தியர் அமைப்பின் ஏற்பாட்டில் கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் நடைபெற்றது.

கழக தலைவர் மருத்துவ கலாநிதி டினேஸ் கூஞ்ஞ அவர்களின் தலைமையில் கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இம்முகாமில் 15ற்கு மேற்பட்ட மருத்துவர்களுடன் தாதியர்கள் தாதிய மாணவர்களென ஜம்பது பேர் கலந்து குருதி அமுக்க பரிசோதனை, கண் பரிசோதனை, பற்சிகிச்சை, புற்றுநோய் பரிசோதனை, பெண் உடலியல் தொடர்பான பரிசோதனைகள் மற்றும் பொது உடற்பரிசோதனைகளை மேற்கொண்டு, நோயாளர்களுக்கான இலவச மருந்துகளையும் வழங்கினர்.

இம்முகாமில் 450 வரையான நோயாளர்கள் கலந்து சிகிச்சைபெற்றனர்.

 

By admin