நெடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட கடற்கரை சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் வழிநடத்தலில் புனித ஆசீர்வாதப்பர் மற்றும் குழந்தை இயேசு இளையோர் ஒன்றியங்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இத்தியானம் கொம்பனி வீதியில் ஆரம்பமாகி அம்மாவோடை கடற்கரை பகுதியை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.
திருப்பலியை அருட்தந்தை சோபன் றூபஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
அத்துடன் கற்கடதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குனி மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
12ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருச்செபமாலை, சிலுவைப்பாதை, நற்கருணை ஆராதனை என்பன இடம்பெற்றன.

