கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா வருகின்ற மாசி மாதம் 27,28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னாயத்த கூட்டம் தை மாதம் 08ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், இவ்வருடம் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகைதருவார்களென எதிர்பார்க்கப்படும் 8000 பக்தர்களுக்கான தங்குமிடம், பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், வடமாகாண கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் புத்திக்க லியனகமகே, இந்திய துணைத் தூதரக அதிகாரி திரு. நாகராஜன், நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர், மேலதிக அரசாங்க அதிபர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பாதுகாப்பு படைகளின் அதிகாரி, யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி மாவட்ட செயலாளர், நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர்கள், கடற்படை அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், சுங்கத் திணைக்கள அதிகாரிகள், துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள், படகு உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

By admin