கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரைத்தல திருவிழா வருகின்ற பெப்ரவரி மாதம் 27, 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

இம்மாதம் 25ஆம் திகதி வரை இராமேஸ்வரம் வேர்கோடு பங்குத்தந்தை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் திருவிழாவில் பங்கேற்பவர்கள் அதிக பணம் நகை, அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் என்பவற்றை கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளதெனவும் வேர்கோடு பங்குத்தந்தை அருட்தந்தை தோமஸ் பரிபாலன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் 5 வயது தொடக்கம் 70 வயதுக்குட்பட்ட பக்தர்கள் மட்டுமே திருவிழாவில் கலந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

By admin