ஈழத்தின் மூத்த ஓவியரும் சிற்பியுமான வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் – ரமணி அவர்கள் மார்கழி மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

ஈழ வரலாற்றில் ஓவியம் மற்றும் சிற்பத்துறைகளில் ஏராளமான பங்காற்றிய ஓவியர் ரமணி அவர்கள் அழகியல் உதவி கல்விப் பணிப்பாளராகவும் இராமநாதன் நுண்கலைப்பீட வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளதுடன் நெல்லியடி மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட கரும்புலி மில்லர் அவர்களின் சிலை மற்றும் தீருவிலில் அமைக்கப்பட்ட போராளிகளின் சிலை, யாழ். இந்துக்கல்லூரியில் உள்ள ஆறுமுக நாவலர், தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோவிலில் உள்ள தங்கம்மா அப்பாக்குட்டி சேர் பொன் இராமநாதன் போன்றோரின் பல சிலைகளையும் வடிவமைத்துள்ளார்.

அத்துடன், திருமறைக்கலாமன்றத்தின் இலட்சினையையும் கலைமுகம் இதழின் பெயரிற்கான எழுத்துருவையும் வடிவமைத்துடன், திருமறைக் கலாமன்றத்தின் ஓவியச் செயற்பாடுகளுக்கு பக்கபலமாக இருந்த மூத்த ஓவியர்களில் இவர் ஒருவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin