யாழ். கிறிஸ்தவ ஒன்றியமும், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான யாழ். மறைமாவட்ட ஆணைக்குழுவும் இணைந்து முன்னெடுத்த ஒன்றிப்பு வார நிகழ்வுகள் தை மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நடைபெற்றன.

கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான யாழ். மறைமாவட்ட ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை செல்வரட்ணம் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான யாழ். மறைமாவட்ட ஆணைக்குழு செயலாளர் அருட்பணி ஞானறூபன் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதல்நாள் நிகழ்வுகள் கடந்த 18ஆம் திகதி சனிக்கிழமை ஒவ்வொரு திரு அவைகளிலும் நடைபெற்றன.

தொடர்ந்து இவ்வாரம் முழுவதும் வண்ணார்பண்ணை மெதடிஸ்த திருச்சபை, இணுவில் தென்னிந்திய திருச்சபை, மருதனார்மடம் கிறிஸ்த சேவ ஆச்சிரமம், யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயம், யாழ்ப்பாணம் இரட்சண்ய சேனை திருச்சபை, பல்கலைக்கழக சிற்றாலயம் ஆகிய இடங்களில் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான சிறப்புக் கருத்தரங்குகளும் வழிபாடுகளும் இடம்பெற்றன.

இறுதிநாள் நிகழ்வுகள் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கிலிக்கன் திருஅவை சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் நடைபெற்றதுடன் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து மறையுரையாற்றினார்.

இவ் ஒன்றிப்புவார நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், குருமட மாணவர்கள், கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin