லண்டன் நாட்டில் வாழும் ஒட்டகப்புல புலம்பெயர் மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஒட்டகப்புல மாதா திருவிழா பிரித்தானிய தமிழ் கத்தோலிக்க ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை எல்மோ அருள்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெம்பிலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப ஆசீர்வாதம் இடம்பெற்றது.
இத்திருப்பலியில் ஏராளமான இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.