எழுவைதீவு பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யூட் கெமில்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

கிளிநொச்சி கனிஸ்ர மகாவித்தியாலய ஆசிரியர் அருட்தந்தை பெனடிக் சதீஸ்குமார் அவர்களின் தலைமையில் புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் 09 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

அத்துடன் கிறிஸ்துவின் திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டு எழுவைதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி யூன் மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தில் ஆரம்பமாகி கிராமத்தை சுற்றி மீண்டும் புனித தோமையார் ஆலயத்தை வந்தடைந்த பவனி அங்கு இடம்பெற்ற நற்கருணை ஆசீருடன் நிறைவடைந்தது.

இப்பவனியில் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin