ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள லூர்து அன்னை கெபியின் 90ஆவது ஆண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

13ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆயத்த நாள் வழிபாடுகள் 14ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை தோமஸ் சவந்தரநாயகம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை புனித அந்தோனியார் கல்லூரி முதல்வர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலியில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் இணைந்து செபித்ததுடன் திருப்பலி நிறைவில் பங்குத்தந்தையின் ஒழுங்குபடுத்தலில் உருவாக்கப்பட்ட ‘அமலோற்பவத் தாயே’ பாடல் இறுவட்டு வெளியீடும் இடம்பெற்றது.

By admin