ஊர்காவற்றுறை புனித பரலோக அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
06ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
நற்கருணைவிழா திருப்பலியை கரம்பொன் பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் திருப்பலி நிறைவில் திருவிழாவை முன்னிட்டு புனித ஜோசேவாஸ் இளையோர் ஒன்றியத்தினரால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டன.
தொடர்ந்து 15ஆம் திகதி திருவிழா இடம்பெற்றதுடன் திருவிழா திருப்பலியை யாழ். புனித மடுத்தினார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருவிழா அன்று மாலை அன்னையின் திருச்சுருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.