ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்புவிழா புரட்டாதி மாதம் 17ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2024ஆம் கல்வி ஆண்டில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறந்த முறையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வணிகத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திரு. நற்குணராசா உமாகாந்த் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். கல்வி வலய ஆசிரியர் ஆலோகசர் திரு. பேதுருப்பிள்ளை நவராஜா மற்றும் கல்லூரியின் பழைய மாணவர் திரு. பெலிக்ஸ் அல்பேட் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.