கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் கிராமத்திலுள்ள இளைஞர் உலகம் இளையோர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட உலக சமாதான தின நிகழ்வு புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
“அமைதியான உலகத்திற்காக இப்போதே செயற்படுங்கள்” என்னும் கருப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிராம இளையோர் மற்றும் சிறுவர்களுக்கான ஓவிய மற்றும் கோலம் வரையும் போட்டிகளும் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பும் நடைபெற்றதுடன் விருந்தினர்களால் வன்முறையற்ற சமாதான சூழலை உருவாக்குவது தொடர்பான கருத்துரைகளும் வழங்கப்பட்டன.
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் பரந்தன் பங்குத்தந்தை அருட்தந்தை ஞானப்பிரகாசம், பரந்தன் கிராம சேவையாளர், பரந்தன் பிரதேச குடும்ப நல உத்தியோகஸ்தர், பாடசாலை ஆசிரியர்கள் மற்றம் கிராமமக்களென பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.