அமலமரித்தியாகிகள் சபையின் நீதி சமாதான நல்லிணக்க பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட உலக அமைதி தின நிகழ்வு புரட்டாதி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சி கனகபுரம் OBTEC நிலையத்தில் நடைபெற்றது.
பணியக இயக்குனர் அருட்தந்தை ஜீவரட்ணம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்கள் கலந்து அமைதி தொடர்பான சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து பணியக இளையோர் அணிக்கான சீருடை அறிமுகமும், கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திரு. முரளிதரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், கரைச்சி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. ராஜ்வினோத், அமலமரித்தியாகிகள் சபை மாகாண முதல்வரின் முதன்மை ஆலோசகர் அருட்தந்தை அன்புராசா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், இளையோர், பொதுமக்கள், பணியக தன்னார்வ தொண்டாளர்களென பலரும் பங்குபற்றியிருந்தனர்.

