உரும்பிராய் பங்கில் பீடப்பணியாளர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம் மார்கழி மாதம் 04ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பீடப்பணியாளர் யாழ். புனித மரியன்னை பேராலயத்தை தரிசித்து யூபிலி கதவினூடாக உள்நுழைந்து அங்கு இடம்பெற்ற திருச்செபமாலையில் பங்குபற்றியதுடன் பேராலய பீடப்பணியாளர்களுடன் இணைந்து உதவுமுறை பயிற்சியையும் மேற்கொண்டனர்.

பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இப்பயிற்சியை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர் திரு. நிசாந்தன் அவர்கள் நெறிப்படுத்தினார்.

தொடர்ந்து பீடப்பணியாளர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லம், மறைநதி கத்தோலிக்க ஊடக மையம், யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடம், யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனம் என்பவற்றை பார்வையிட்டதுடன் அன்றைய தினம் மாலை கியூடெக் நிறுவன பணியாளர்களுடனான மகிழ்வூட்டல் செயற்பாடுகள், விளையாட்டுக்கள் என்பவற்றிலும் பங்குபற்றினர்.

இந்நிகழ்வில் 31 பீடப்பணியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin