உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தேசிய இளையோர் வார சிறப்பு நிகழ்வுகள் புரட்டாதி மாதம் 28ஆம் திகதி தொடக்கம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி வரை நடைபெற்றன.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 28ஆம் திகதி புனித அந்தோனியார் ஆலயத்தில் கொடியேற்றலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில், காலை இரத்ததான நிகழ்வும் மாலை, போதைப்பொருள் மற்றும் தொலைபேசி பாவனை பற்றிய விழிப்புணர்வு கருத்தமர்வும் தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் இடம்பெற்றன.
இறுதிநாள் நிகழ்வுகள் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதுடன் காலை புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து மாலை கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இக்கலைநிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட கிறிஸ்த மத கலாச்சார உத்தியோகத்தர் லூரிஸ் மேரி உத்தரியா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் 30 இளையோர் இந்நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.
