2019ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று இலங்கையின் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 6ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 21ஆம் திகதி திங்கட்கிழமை பல இடங்களிலும் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது.

யாழ். மறைமாவட்டத்தில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புனித மரியன்னை பேராலயத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. பேராலய முன்றலில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் சுடரேற்றப்பட்டு வழிபாடும் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

தொடர்ந்து எரியும் மொழுகுவர்திகளை தாங்கி பவனியாக ஆலயத்திற்குள் சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த உயிர்த்த ஆண்டவர் திருச்சொருபத்திற்கு ஒளியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், இறைமக்களென பலரும் கலந்து இறந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபித்தனர்.

By admin