உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட குணமாக்கல் வழிபாடு நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலயத்தில் மாசி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை இன்றும் கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் 20ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமையும் நடைபெற்றன.
சிலுவைப்பாதை தியானம், திருப்பலி, இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, என்பவற்றை உள்ளடக்கிய இவ்வழிபாட்டில் மக்கள் பக்தியுடன் கலந்துகொண்டனர்.
அத்துடன் உருத்திரபுரம் பங்கில் மாசி மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை கோணாவில் புனித செபஸ்தியார் ஆலயத்திலும் மாலை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்திலும் குணமாக்கல் வழிபாடுகள் இடம்பெற்றன.

