யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் 2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட வழிகாட்டல் செயலமர்வுகள் புரட்டாதி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றன.

நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் உதவியுடன் இச்செயலமர்வுகள் இடம்பெற்றன.

யாழ். மறைக்கோட்ட மாணவர்களுக்காக யாழ். மறைக்கல்வி நிலையத்திலும், தீவக மறைக்கோட்ட மாணவர்களுக்காக ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும், இளவாலை மறைக்கோட்ட மாணவர்களுக்காக இளவாலை புனித ஹென்றியசர் கல்லூரியிலும், பருத்தித்துறை மறைக்கோட்ட மாணவர்களுக்காக பருத்தித்துறை புனித தோமையார் றோ.க. பெண்கள் பாடசாலை மற்றும் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும், கிளிநொச்சி மறைக்கோட்ட மாணவர்களுக்காக கிளிநொச்சி மறைக்கல்வி நிலையம் மற்றும் இரணைதீவு மகாவித்தியாலயத்திலும், நடைபெற்ற செயலமர்வுகளில் 300ற்கும் அதிகமான மாணவர்கள் கலந்து பயனடைந்தனர்.

By admin