குருநகர் புனித யோசவ்வாஸ் இளையோர் மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட “உதிரம் சுமந்த சிலுவை” திருப்பாடுகளின் தியான ஆற்றுகை பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலய முன்னறலில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்ற தலைவர் செல்வன் கிறகோரி ஜெயராஜ் அவர்களின் தலைமையில் 60ற்கும் அதிகமான கலைஞர்களின் பங்குபற்றுதலோடு இவ்வாற்றுகை மேடையேற்றப்பட்டது.
ஆற்றுகையின் ஆரம்பத்தில் தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்ட வீரர்கள், தேசிய ரீதியான சாதனை புரிந்த வீரர்கள், பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான கௌரவிப்பு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

