உடுவில், மல்வம் பங்கு மறைக்கல்வி மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வு ஆவணி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்சகோதரர்கள் ஸ்ரிபன், போல் ஆகியோர் வளவாளர்களாக கலந்து விளையாட்டுக்கள், குழுச்செயற்பாடுகள், கருத்துரைகள் ஊடாக மாணவர்களை வழிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் அருட்தந்தை வசந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் 150 வரையான மாணவர்களும் 20 மறையாசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர்.